பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை மாதங்கள் ஏமாற்றி வந்த கோபியின் உண்மை முகம் குடும்பத்திற்கு தெரியவர இப்போது அடுத்தடுத்து நிறைய அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாகின்றன.
கோபி இனியாவை வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து ராதிகாவுடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
கடைசி எபிசோடில் இனியாவிற்கு ஆதரவாக கோபி பேச ராதிகா கடும் கோபத்தில் உள்ளார். எனவே அடுத்தடுத்து நிறைய சண்டைகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெனிபர் புதிய சீரியல்
இந்த பாக்கியலட்சுமி தொடரில் முதலில் ராதிகாவாக நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் ரேஷ்மா ராதிகா என்ற வேடத்தில் நடித்து வருகிறார்.
ஜெனிபருக்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறக்க இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஆனால் எந்த தொலைக்காட்சி, என்ன தொடர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.
View this post on Instagram