பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவர் தான்

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியே போகும் போட்டியாளர் யார் என்கிற கேள்விக்கு பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது இந்த வார எலிமினேஷன் யார் என்கிற உறுதியான தகவல் வந்திருக்கிறது.

எலிமினேஷன்
வந்திருக்கும் தகவல்களின்படி ராபர்ட் மாஸ்டர் தான் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு தான் வாக்குகள் மிக குறைவான அளவு கிடைத்திருக்கிறது.

ரச்சிதாவிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அவர் இன்று வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

இன்று மூன்று போட்டியாளர்கள் மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில் அவரது எலிமினேஷன் காட்சிகள் நாளைய எபிசோடில் காட்டப்படும்.