சாய் பல்லவி
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சாய் பல்லவி. கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
புதிய முடிவு?
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊர் கோயம்புத்தூரில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்தவ படிப்பை முடித்தவர்.
படித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் வந்துள்ளார்.
சினிமாவில் விட்டு விலகுகிறாரா
இதனால், தற்போது தனது படிப்பை வீணடிக்க கூட என்று எண்ணியுள்ள சாய் பல்லவி மருத்துவமனை கட்டி அதை கவனித்துள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், நடிப்பில் இருந்து விலக சாய் பல்லவி முடிவெடுத்திவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஒரு பக்கம் மருத்துவத்தையும் மறுபக்கம் நடிப்பையும் தொடருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.