பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல சீசனிற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. இதுநம் கலாச்சாரத்திற்கு சரியான நிகழ்ச்சி இல்லை, வருங்காலத்தினருக்கு இப்படியொரு நிகழ்ச்சியை காட்டுவது சரியில்லை என நிறைய கூறப்பட்டன.
ஆனால் எப்படியோ முதல் சீசன் முடிந்து இப்போது 6வது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
6வது சீசனில் 7 வாரங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிகழ்ச்சி பலரது வாழ்க்கையில் நல்ல வெற்றியை கொடுத்தாலும் சிலருக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
ஷக்தி ஓபன் டாக்
பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன், நடிகர் என்ற அடையாளத்தோடு உள்ளே நுழைந்தவர் ஷக்தி. இவர் அண்மையில் ஒரு பேட்டியில், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர தான் அந்நிகழ்ச்சி சென்றேன், ஆனால் இதே நிகழ்ச்சி என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது.
அங்கிருந்தவர்கள் என்னை வேறு திசைத்திருப்பி மன உளைச்சலை கொடுத்தனர். இதனால் கெட்டப்பெயர் தான் மிச்சம், என் வாழ்க்கையே போனது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.