பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட விருந்துபசார நிகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிசார்!

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு வெலிகம கடற்கரையில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பேரை சந்கேத்தில் கைது செய்துள்ளனர்.

வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் மாத்திரை
இதன்போது போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, தெலிஜ்ஜவில பெலியஅத்த உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று (27) இவர்களை மாத்தறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.