தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி அடங்குவது வழக்கம். இரு வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு உடைய தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசப்பட்டது. அதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார் தற்போது மீண்டும் திருமண தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.
கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டதாகவும், கீர்த்தி சுரேசும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிவான காரணத்தினாலேயே திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டுக்கும், அங்குள்ள கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் திருமணத்தை உறுதிப்படுத்தவில்லை.