நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைவில் முழுமையாக குணமடைவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமந்தா நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்ப்புக்குரிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்கு இணைந்து கலந்துரையாடினார்.
சமந்தா வாங்கிய முதல் சம்பளம்
அப்போது ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வந்த சமந்தா, தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசினார்.
இதில், தான் 10வது படிக்கும் பொழுது ஹோட்டலில் வேலை செய்ததாகவும், அந்த வேலைக்காக ரூ. 500 சம்பளமாக கிடைத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.
இன்று ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கி வரும் சமந்தா முதன் முதலில் ரூ. 500 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Samantha‘s recent chat session with her followers!! pic.twitter.com/cwJpOCz1z4
— Anbu (@Mysteri13472103) April 18, 2022