லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மிகப்பெரிய லாபம் என்றால் அது இந்த படம் தான் என விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் தற்போது ஓடிடியில் லவ் டுடே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
தெலுங்கில் நல்ல வசூல்
விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து இருக்கும் தில் ராஜு தான் லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வசூல் குவிந்திருந்தது. தற்போது முதல் வாரத்தில் 10.6 கோடியை விட அதிகமாக லவ் டுடே அங்கு வசூலித்து இருக்கிறதாம்.