ரிலீசுக்கு தள்ளிப்போகின்றதா விஜயின் வாரிசு!

துணிவு – வாரிசு
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

துணிவு திரைப்படம் வெளியாகவுள்ள அதே நாளில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகிறது.

வீரம் – ஜில்லா ஆகிய படங்களுக்கு பிறகு அஜித் – விஜய்யின் திரைப்படங்கள் தற்போது தான் ஒரே நாளில் வெளியாகிறது.

இதனால், இரு திரைப்படங்கள் மீதும் ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பினை வைத்திருந்தனர்.

ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், துணிவு – வாரிசு திரைப்படங்களின் ரிலீஸ் குறித்து பிரபல நடிகர் மகத் திடீரென ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாவதாக இருந்த துணிவு – வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை என்று கூறி இருக்கிறார். துணிவு திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆகிறது என்றும்.

அதன்பின் நான்கு நாட்கள் கழித்து தான் விஜய்யின் வாரிசு ரிலீஸ் ஆகிறதாக தான் கேள்விப்பட்டேன் என்று மகத் கூறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் படுவைரலாகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இரு படக்குழுவிடம் இருந்து எப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகிறது.