விளம்பரத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் இறைவன், சைரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இத்தனை கோடியா
படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜெயம் ரவி அவ்வப்போது விளம்பரங்களில் நடிப்பார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் ஜெயம் ரவி.

இந்நிலையில், இந்த விளம்பரத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவிக்கு ரூ. 5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.