பிக் பாஸ்
பிக் பாஸ் 6 தற்போது பாதி நாட்களை கடந்துவிட்டது. மீதம் இருக்கும் நாட்களில் சிறப்பாக விளையாடி யார் பைனல் வரை செல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும் சரியாக போட்டியில் கவனம் செலுத்தாத போட்டியாளர்கள் தான் எலிமினேஷனில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அசல், ராபர்ட், ஷெரினா உட்பட இதுவரை 6 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.
வெளியேற்றப்பட்ட குயின்சி
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் இருந்தனர்.
அதில் குயின்சி தான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்து இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் இன்றே முடிவடைந்த நிலையில் குயின்சி எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.