நடிகை அம்பிகா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அம்பிகா, கண் அழகால் ரசிக்க வைத்த ஒரு நாயகி.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்றும் ஒரு ஆங்கில படமும் நடித்துள்ளார். நடிப்பு, நடனம் என இரண்டிலும் அசத்தும் பிரபலம்.
1979ம் ஆண்டு சக்களத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த இவர் 1997ம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
சன் தொலைக்காட்சியின் நாயகி தொடரில் நடிக்கும் அம்பிகா சில நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
நாயகியின் மகன்
நடிகை அம்பிகாவிற்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது, ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. இவருக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது நடிகை ராதிகா தனது மகன் ராம் கேசவுடன் எடுத்த புகைப்படம் இதோ,