சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட இயக்குனர்

ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக இருக்கிறது.

சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் படத்திற்காக விதவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் கவர்ச்சியாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதில், நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்க்கிறார்.

பிறகு நடிகையின் பாதத்தை கடிப்பது போன்று அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தனது படத்தை விளம்பரப்படுத்த இப்படி ஒரு செயலைச் செய்ததால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.