பிக்பாஸ் காயத்ரி ரகுராம்
பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் 14 வயதில் நுழைந்தவர் காயத்ரி ரகுராம். 2002ம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு ஸ்டைல் பரசுராம், விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட அவர் மக்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார். பின் அரசியலில் ஈடுபட்டு தனது முழு கவனத்தை அதில் செலுத்தி வந்தார்.
விவாகரத்து பற்றி பேச்சு
ஒரு பேட்டியில் அவர், திருமணத்தின் போது எனக்கு 22 வயது, என் அப்பா தான் கல்யாணம் செய்து வைத்தார். பின்னர் குறுகிய காலத்திலேயே விவாகரத்து நடந்தது. அதில் அவரையும் குற்றம் சொல்ல முடியாது என்னையும் குற்றம் சொல்ல முடியாது.
விவாகரத்திற்கு பிறகு அவர் அவருடைய சொந்த விவாகரத்திற்கு தேடி சென்றுவிட்டார் பின்னர் அதனை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்கு அர்த்தமே இல்லை என்று கூறினார்.