கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:- பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது.
கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது. மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம்.
குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும். மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.