ஏகே 62
துணிவு படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
சில செய்திகளில் விஜய் சேதுபதி தான் வில்லன் என்று கூறினாலும் கூட அது உண்மையில்லை என விஜய் சேதுபதியே தெரிவித்துவிட்டார்.
வில்லன் இவரா
இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்கபோவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது.