நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தற்போது ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘சந்திரமுகி 2’-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
We are elated 😌✨ to welcome #KanganaRanaut into the world of #Chandramukhi2 🗝️@offl_Lawrence 😎 #PVasu 🎬 Vaigaipuyal #Vadivelu @realradikaa ✨ @mmkeeravaani 🎶 @RDRajasekar 🎥 #ThottaTharani 🎨 @proyuvraaj 🎙️ @gkmtamilkumaran 🫱🏼🫲🏻@LycaProductions #Subaskaran 🪙 pic.twitter.com/cmLp5ehJ7o
— Lyca Productions (@LycaProductions) December 10, 2022