திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் சரத்குமார்

சரத்குமார்
நடிகர் சரத்குமார் அரசியல் சினிமா என ஒரே நேரத்தில் இரண்டையும் கவனித்து வருகிறார். அவர் தனியாக சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவி நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் வாரிசு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் தற்போது சரத்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார் என செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் இது பற்றி சரத்குமார் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் சரத்குமார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். தற்போது அவர் பூரண நலமுடன் சென்னை வந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.