பாக்கியலட்சுமி
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடர். கணவனால் ஏமாற்றப்பட்டவர் துவண்டு போகாமல் எப்படி தனது குடும்பத்தை கவனிக்கிறார் என்பதை கதை சொல்ல வருகிறது.
இப்போது தமிழில் காலணி தேர்தல் வருகிறது, அதில் பாக்கியா நிற்க முடிவு செய்ததும் போட்டிக்கு கோபி ராதிகாவை நிற்க வைக்கிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை, இந்த தேர்தல் காட்சிகள் மட்டும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.
வெளியேறுகிறாரா நடிகை
இந்த தொடரில் எழில் காதலி அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இவருக்கு வினு என்பவருடன் தான் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் ஹனிமூனிற்காக மாலத்தீவு சென்ற புகைப்படத்தையும் ரித்திகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
தற்போது என்னவென்றால் நடிகை ரித்திகா திருமணத்திற்கு பின் நடிப்பை நிறுத்த முடிவு செய்து பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மை தகவல் என்ன என்று தெரியவில்லை.