லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் பல கோடிகளை வசூலில் குவித்து வருகிறது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தெரியுமா, வாங்க பார்க்கலாம்..
மொத்த வசூல்
லவ் டுடே பட்ஜெட் = ரூ. 7 கோடி
தமிழ்நாடு வசூல் = ரூ. 55 கோடி, தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்த ஷேர் = ரூ. 25 கோடி
கேரளா உரிமை = ரூ. 15 லட்சம்
கர்நாடகா ஷேர் = ரூ. 1 கோடி
ஆந்திரா, தெலுங்கானா ஷேர் = ரூ. 6 கோடி
வெளிநாட்டு ஷேர் = ரூ. 9 கோடி
சாட்டிலைட் உரிமை = ரூ. 2.25 கோடி
டிஜிட்டல் உரிமை = ரூ. 5.25 கோடி
ஆடியோ உரிமை = ரூ. 25 லட்சம்
மொத்தமாக ரூ. 48.90 கோடி லாபம். விநியோகஸ்தர்களின் 10% கமிஷன் போக ரூ. 44.8 கோடி தயாரிப்பாளருக்கு லாபமாக கிடைத்துள்ளது.