திருமணமான நூறாவது நாளை கொண்டாடும் ரவீந்தர்-மகாலட்சுமி

ரவீந்தர்-மகாலட்சுமி
பொதுவாக படங்களில் நாயகி அழகாக இருப்பதால் அவர் மீது நாயகன் காதல் கொள்கிறார் என்று தாக் காட்டியிருப்பார்கள். இப்போது தான் அப்படி இல்லாமல் குணம் பார்த்து காதல் வயப்படுகிறார்கள்.

அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் குணத்தை பார்க்காமல் அழகை பார்த்து காதலிக்கும் இளம் தலைமுறையினரும் உள்ளார்கள்.

தமிழ் திரையுலகில் ஒரு ஜோடி எப்படி இருக்கிறார் என்பதை பார்க்காமல் குணத்தை பார்த்து திருமணம் செய்துள்ளனர், அதுவேறு யாரும் இல்லை ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி தான். இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சிலர் தான் இவர்கள் எப்படி திருமணம் செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

புதிய போட்டோ
இவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் முடிந்து 100 நாட்கள் ஆகிவிட்டதாம், இதனை கொண்டாட இருவரும் வெளியே சென்றுள்ளார்கள். அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ரவீந்தர் 100 அழகிய நாட்கள் என மனதில் இருந்ததை பதிவு செய்துள்ளார்.