நடிகர் நாகேஷ்
தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் நாகேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர்.
1958ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பலரின் பேவரெட் காமெடி நடிகராக நாகேஷ் அவர்கள் இருக்கிறார்.
ஆனால் இவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது, அது என்னவென்றால் இவருக்கு உயரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது தான்.
நடிகரின் மகன்
ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்த நாகேஷ் அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஆனந்த் பாபு நாகேஷ் அவர்களை போல சினிமாவில் படங்கள் நடித்திருக்கிறார் மற்றும் நல்ல நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.
தற்போது கூட அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம், முத்தழகு போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.