அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60ஆக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் இந்தக் கொள்கை நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஓய்வுப் பெறப் போகும் பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள்
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற 25,000 பேருக்கும் அதிகமானோர் உள்ளனர். நாட்டின் தற்போதைய நிலையை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று ஒரு குழுவுக்கான கொள்கைகளை மாற்றும் நிலையில் இந்த நாடு இல்லை. நாட்டின் நிலைக்கு ஏற்ப, திறைசேரி அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.