நடிகர் அதர்வா
நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு பாணா காத்தாடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதன்பிறகு தொடர்ந்து 15 படங்களுக்கு மேல் நடித்தாலும் சரியான ரீச் பெறவில்லை.
பின் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதுகள் பல பெற்றார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த அதர்வா 2018ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான செம போதை ஆகாதே என்ற திரைப்படத்தின மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார்.
நடிகரின் அம்மா
மறைந்த நடிகர் முரளி சோபனா என்பவரை திருமணம் செய்து ஒரு மகள் மற்றும் 2 மகன்களை பெற்றார். அதர்வாவிற்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்.
அதர்வா ஒருமுறை தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத் வெளியிட்டிருந்தார், தற்போது அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் அதர்வாவின் அம்மாவா, அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.