வைரலகும் RJ பாலாஜி புகைப்படம்!

RJ பாலாஜி
எப்எம் ரேடியோ மூலம் பிரபலம் ஆகி, அதன் பின் காமெடி நடிகராக தொடங்கி தற்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார் RJ பாலாஜி.

அவரது எல்கேஜி போன்ற படங்கள் நல்ல விமர்சனம் மட்டுமின்றி வசூலும் பெற்றன. மூக்குத்தி அம்மன் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் அதிகம் பேசப்பட்டது.

வைரல் போட்டோ
தற்போது RJ பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் சலூன் நடத்தும் நபராக RJ பாலாஜி நடித்து இருக்கிறார். ஏற்கனவே போஸ்டர் வெளியாகி வைரலாகி இருந்தது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று இருக்கிறது என குறிப்பிட்டு பாலாஜி ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அடையாளமே தெரியாத வகையில் மாறி இருக்கிறார்.

அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.