பாரதி கண்ணம்மா
பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும், பாரதி கண்ணம்மா சேர்ந்து விடுவார்கள், அதனால் சீரியலும் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடந்தது வேறு.
பாரதிக்கு மொத்த உண்மை தெரிந்தபிறகும் சீரியல் நீண்டுகொண்டே தான் செல்கிறது. பாரதி உடன் சேர்ந்து வாழ முடியாது என கூறிவிட்டு கண்ணம்மா இரண்டு குழந்தைகள் உடன் அவரது அப்பாவின் கிராமத்துக்கு சென்றுவிடுகிறார்.
அவரை தேடி கண்டுபிடிக்க அலையும் பாரதியும் ஒருவழியாக அந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார்.
ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
கதை இப்படி மாறும் என ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கதையை முடிக்காமல் இருக்கும் இயக்குனரை நெட்டிசன்கள் தற்போது அதிகம் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
‘இயக்குனர் இப்போதான் மூவேந்தர் படம் பாத்திருப்பார் போல’ என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், அடுத்தகட்டகதையை அந்த படத்தில் இருந்து தான் காபி அடிக்கிறார் போல எனவும் கலாய்த்து வருகிறார்கள்.