தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.