உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய அனுஷ்கா

அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா.

இவர் தமிழில் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், திடீரென உடல் எடை கூடி குண்டான காரணத்தினால் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அனுஷ்கா இழந்து வந்தார்.

கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சைலென்ஸ திரைப்படம் கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

உடல் எடை
இந்நிலையில், தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்து பழையபடி ஒல்லியாக மாறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் அனுஷ்காவை பார்க்கும் பலரும், நம்ம அனுஷ்காவா இது எப்படி மாறிவிட்டார் பாருங்க என்று கூறுகிறார்களாம். அந்த அளவிற்கு அனுஷ்கா மாறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் அவருடைய லேட்டஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று..