வைரலாகும் அசீம் மற்றும் ரச்சிதாவின் புகைப்படம்

பிக்பாஸ் 6
விஜய் டிவி படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஜனவரியில் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது.

70 நாட்களை இப்போது நிகழ்ச்சி தாண்டிவிட்டது, இதில் இருந்து பிரபலங்கள் 11 பேர் வெளியேறிவிட்டார்கள். வெளியேறியவர்கள் அனைவருமே மக்களால் தேர்வு செய்து வெளியேற்றப்பட்டவர்கள் தான். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மாறி மாறி ஓட்டுபோட்டு வருகிறார்கள்.

ரச்சிதா மற்றும் அசீம்
பிக்பாஸ் ஆரம்பித்ததில் இருந்து அதில் போட்டிபோடும் பிரபலங்கள் பற்றி நிறைய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நடிகை ரச்சிதா மற்றும் நடிகர் அசீம் இருவரும் சினிமாவிற்குள் நுழையும் போது எப்படி இருந்தார்கள் என்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரச்சிதா மற்றும் அசீமா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.