ஜி.பி.முத்து
டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையை கேட்டதும் மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது ஜி.பி.முத்து தான். டிக்டாக் நிறுத்தப்பட்டதால் அப்படியே ஜி.பி.முத்து யூடியூப் பக்கம் தாவினார்.
இவரது நெல்லைப் பேச்சு, நக்கல் பேச்சுகளுக்கு ரசிகர்கள் அடிமை, தபால் சேவை இவராலேயே அதிகம் வளர்ந்தது என்றே கூறலாம். இவருக்கு டிக்டாக் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2 நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
புதிய வீடு
ஜி.பி.முத்துவின் வீடு எப்படி இருக்கும் என நமக்கே தெரிந்தது தான். ஓட்டு வீட்டில் இருந்த அவர் இப்போது புதிய வீட்டிற்கு மாறியுள்ளார். அந்த புதிய வீட்டில் பால் காய்ச்சி அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவும் செய்துள்ளார்.
ரசிகர்களும் அவருக்கு நல்லது, வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்