பிரான்ஸ் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு புதிய யைடக்கதொலைபேசி மோசடி நடைமுறைக்கு வந்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினரிடமிருந்து குறுந்தகவல் செய்திகள் அனுப்பப்படுவதாக கூறி இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரான்ஸ் மக்களுக்கு ஒரு குறுந்தகவல் கிடைப்பதாகவும், அதில் நெருங்கிய உறவினர் அல்லது பெற்ற பிள்ளைகள் போன்று குறுந்தகவல் அனுப்பப்படுகின்ற நிலையில் அதில் தங்கள் கையடக்க தொலைபேசி பழுதடைந்துள்ளதாகவும், கூறப்படுகின்றது.
அந்த குறுந்தகவலில் ஒரு இணைப்புடன் கூடிய தொலைபேசி எண்ணையும், எண்ணைச் சேர்ப்பதற்கான அழைப்பிதழும் உள்ளடக்கியுள்ளது. பின்னர், அனுப்பியவர் தங்களின் உடைந்த தொலைபேசி மாற்றுவதற்கு உதவியாக ஒரு தொகை பணத்தையும் அவசரமாக கோருகின்றனர்.
சிலர் தங்கள் கையடக்க தொலைபேசியில் வங்கி சேவை உள்ளமையினால் கையடக்க தொலைபேசி திருத்தியவுடன் பணத்தை உடனடியாக திருப்பி செலுத்துவதாக உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த குறுந்தகவல்கள் விசேடமாக வயோதிப பெற்றோர்களை குறி வைத்தே முன்னெடுக்கப்படுகின்றது.