ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, மேற்கு காபூலில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க நேற்று முன்தினம் தற்காலிக தடை விதிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.