பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்

பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காடசியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.

எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது காதலி எல்லாம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ரச்சிதாவிற்கு அவரது கணவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

ஓட்டிங் விவரம்
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் இப்போது வரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் தான், அவருக்கு முந்தைய லிஸ்டில் ஏடிகே உள்ளார்.