அஜித்தின் துணிவு படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

துணிவு
நேற்று துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் அஜித் மற்றும் அவரது டீம் ஒரு வங்கிக்குள் கொள்ளையடிக்க சென்று அங்கிருப்பவர்க்ளை பிடித்து வைத்துக்கொண்டு போலீசிடம் பேரம் பேசுவது போல தான் கதை இருக்கிறது.

ட்ரைலர் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது 16 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளை துணிவு ட்ரைலர் கடந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

கலாய்த்த ப்ளூ சட்டை
இந்நிலையில் துணிவு படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார். “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!” என குறிப்பிட்டு Inside Man என்ற ஹாலிவுட் படத்தின் ட்ரைலரை பகிர்ந்து இருக்கிறார்.

துணிவு படம் அந்த படத்தின் சாயலில் இருப்பதாக தான் அவர் இப்படி விமர்சித்து இருக்கிறார்.