பாவனா
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாவனா. இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்த பாவனா இதன்பின் வேறு எந்த ஒரு தமிழ் படத்தில் நடிக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து கொண்டு தான் இருந்தார்.
மீண்டும் தமிழில்
இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளாராம் பாவனா. தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள பாவனா இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
13 வருடங்களுக்கு பின் நடிகை பாவனா தற்போது தான் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.