நடிகை பானுப்ரியா
நடிகை பானுப்ரியா, தனது 17 வயதில் நடிக்க ஆரம்பித்தவர். முதல் தமிழ் திரைப்படம் மெல்ல பேசுங்கள், தெலுங்கில் நடித்த முதல் படம் சித்தாரா.
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாபாத்திரங்களாகவே அமைந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
திருமணம்
அமெரிக்காவை சேர்ந்த ஆகாஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட பானுப்ரியாவிற்கு அபிநயா என்ற மகள் உள்ளார்.
ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் கணவரை பிரிந்த பானுப்ரியா சென்னை வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்து படங்கள் நடித்து வருகிறார்.
இவரது மகள் இப்போது எப்படி உள்ளார் என்ற புகைப்படங்கள் இல்லை, ஆனால் சிறுவயது போட்டோக்கள் உள்ளன. இதோ,