விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையில் வாரிசு-துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராஜாவின் பார்வையிலே படத்தை சில திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித், இந்திரஜா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.