பாகிஸ்தானியர் ஒருவர் 50 வயதில் 60வது முறையாக தந்தையான சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, சமீபத்தில் ஒரு மகனை பெற்றெடுத்தார் மகனி பெயர் ஹாஜி குஷல் கான். பாகிஸ்தானின் குவெட்டா நகரின் கிழக்கு பைபாஸ் அருகே வசிக்கும் மருத்துவரான இவர், 3 பெண்களை திருமணம் செய்துள்ளார்.
60வது குழந்தை பிறந்த மகிழ்ச்சி
இந்நிலையில் 60வது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த அவர், இப்போது நான்காவது பெண்ணைத் தேடுகிறார். ஏனெனில் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்.
மூன்று மனைவிகள் உள்ள நிலையில், நான்காவதாக ஒருவரை மணந்து கொண்டு, மேலும் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறாராம். குடும்ப மேலும் விரிவாக்கும் திட்டம் இருந்தாலும், கில்ஜி தனது குடும்பத்தினர் அனைவருடன் ஒரே வீட்டில் தங்கவே விரும்புகிறார்.
பொருளாதார நெருக்கடி
இதற்கிடையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பணவீக்க அளவு பெரிதும் அதிகரித்துள்ளது கில்ஜியை நிதி ரீதியாக பாதித்தது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக, நான் உட்பட, உலகம் உட்பட, அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்,” என்று சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி கூறினார்.
இருப்பினும், குடும்பத்தை விரிவுபடுத்தும் தனது தொட்டத்தில் உறுதியான அந்த நபர் தனது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் செலவுகளைச் சமாளிக்க முடிந்த அனைத்தையும் செய்ய தாயராக இருக்கிறார்.
கில்ஜிக்கு தனது குடும்பத்தை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்ல ஏராளமான வாகனங்கள் தேவைப்படுவதால் அவருக்கு அது சாத்தியமற்றதாகிவிட்டது.
எனவே “அரசாங்கம் எனக்கு ஒரு பஸ் கொடுத்தால், என் குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள இடங்களுக்கு எளிதாக அழைத்துச் செல்ல முடியும் என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளாராம்.