பொது மேடையில் கண்ணீர்விட்டு அழுத சமந்தா

நடிகை சமந்தா
பல்லாவரத்து பொண்ணு என்று தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகை சமந்தா.

ஆரம்பத்தில் ரூ. 500 வாங்கிக் கொண்டு மாடலிங் துறையில் பயணித்து வந்த சமந்தா படிப்படியாக தனது சொந்த முயற்சி, உழைப்பின் மூலம் இப்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார்.

பாலிவுட் மற்றும் ஒரு ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகி இருந்தார், ஆனால் அடுத்த கட்டத்திற்கு இன்னும் செல்லவில்லை, காரணம் நோய் தாக்கத்தால் வீட்டிலேயே முடங்கி இருந்தார் சமந்தா.

கண்ணீர்விட்டு அழுத நடிகை
இப்போது சமந்தாவே பெரிய அளவில் எதிர்ப்பார்க்கும் சகுந்தலம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது. இப்படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அவர் கூற, உடனே எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.

பின் நடிகை சமந்தா பேசும்போது, இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும்.

ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்றிருக்கிறார்.