அம்பானியின் கோடிக்கணக்கிலான ஆஃபரை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது மகளின் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்று ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டாராம்.

ஆஃபரை நிராகரித்த ரஜினிகாந்த்
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் டாப் 10 பணக்கார்களில் ஒருவரான அம்பானி சூப்பர் ஸ்டார் ரஜினியை தன்னுடைய கம்பெனி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்காக பல கோடி சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தாராம். ஆனால், ரஜினி அந்த பல கோடி ஆஃபரை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இனி நம்முடைய நட்பு தொடர வேண்டும் என்றால், விளம்பரத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டாராம் ரஜினிகாந்த்.