தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6
இந்த நிகழ்ச்சி தற்போது 95 நாட்களை கடந்த நிலையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்றைய தினம் ராபர்ட் மாஸ்டர் அசல் கோளார், ஜி.பி முத்து சாந்தி மாஸ்டர் ஆகியோர் மீண்டும் வந்த நிலையில் இன்றைய தினம் தனலக்ஷ்மி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீண்டும் வந்துள்ளனர்.
இவர்கள் மீண்டும் வந்தது அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. அனைவரும் அவர்களை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், ADK முதலில் பிக்பாஸ் போல மாறி போட்டியாளர்களை வழி நடத்தி இருந்தார். மேலும் அவருக்கு தோன்றும் டாஸ்க்குகளை கூட கொடுக்கலாம் என கூறப்பட்டது.
பின்னர் பிக்பாஸ் போல மாறிய ஷிவின், வீட்டிற்குள் மீண்டும் வந்த தனலட்சுமி, சாந்தி, ஜி.பி முத்து உள்ளிட்டோரை குழந்தைகள் போல மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து, குழந்தை போலவே பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த தனலக்ஷ்மி, குழந்தைகள் போல அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் பிக்பாஸ் போல மாறிய ஷிவின், வீட்டிற்குள் மீண்டும் வந்த தனலட்சுமி, சாந்தி, ஜி.பி முத்து உள்ளிட்டோரை குழந்தைகள் போல மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து, குழந்தை போலவே பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த தனலக்ஷ்மி, குழந்தைகள் போல அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தார்.
அப்படி இருக்கும் நிலையில், குழந்தைகள் அழுவது போலவே அழுதபடி, “எனக்கு பூமர் வேணும், எனக்கு பூமர் வேணும். பூமர் குடுக்க சொல்லுங்க” என கூறிக் கொண்டே இருக்கிறார்.
இதனைக் கேட்டதும், “கலாய்க்குறா” என மைனா கூறுகிறார். இதன் பின்னர் பேசும் விக்ரமன், “அது எல்லாம் இங்க இல்ல. பூமர் எல்லாம் சாப்பிட்டா அப்புறம் முழுங்கிடுவீங்க” என தெரிவிக்கிறார்.
அப்போது பேசும் தனலக்ஷ்மி, “அப்புறம் ஏன் அங்கிள் வீட்டுல பூமர் வெச்சுருக்கீங்க” என கூறினார். சமீப காலமாக, பிக்பாஸ் வீட்டிற்குள் பூமர் என்பது பற்றிய கருத்து பரவலாக இருந்து வருகிறது.
அசீம், விக்ரமன், அமுதவாணன் உள்ளிட்டோர் பூமர் என மாறி மாறி பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில், அதனை ஜாலியாக தனலக்ஷ்மி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.