விஜய் – எஸ்.ஏ.சி
நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே சில பிரச்சனை இருப்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை அனைவருக்கும் தெரியவந்தது.
இதனால் விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எதற்காக விஜய் தனது தாய், தந்தையிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குள் பிரிவு வர என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இவர் தான் காரணம்?
இந்நிலையில், இதுகுறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் தனது தாய், தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதற்கு அவருடைய மனைவி சங்கீதா தான் காரணம் என கூறப்படுகிறது.
துப்பாக்கி படம் வரை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான் விஜய்யின் அணைத்து விஷயங்களையும் கவனித்து கொண்டார். படத்தின் கதை கேட்பது, படத்திற்கான சம்பளம் பேசுவது, பேசிய சம்பளத்தை அவரே வாங்கி கொள்வது என்று இருந்தது.
ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதா, ஏன் இதையெல்லாம் நீங்களே கவனித்து கொள்ளலாமே என்று விஜய்யிடம் கூறினாராம். இதன்பின் எஸ்.ஏ.சி கவனித்து வந்த அணைத்து விஷயங்களையும் விஜய் கவனித்து கொள்ள துவங்கியுள்ளார்.
எஸ்.ஏ.சி வைத்திருத்த ஆட்களை எல்லாம் தூக்கிவிட்டு புதிய ஆட்களை விஜய் வேலைக்கு சேர்த்தாராம். இதனால் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
இதன்பின் தான் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வீடு கட்டி சென்றுவிட்டாராம் விஜய். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.