தெலுங்கு சினிமாவில் பல படங்கள் அம்மா ரோலில் நடித்து வருபவர் ஜெயசுதா. அவர் 1972ல் மிக இளம் வயதிலேயே நடிக்க தொடங்கியவர். அவர் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து இருக்கிறார் அவர்.
ஜெயசுதா ஏற்கனவே 2வதாக நிதின் கபூர் என்ற நபரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
மூன்றாம் திருமணம்?
இந்நிலையில் ஜெயசுதா தற்போது மூன்றாவது முறையாக ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
தற்போது ஜெயசுதாவுக்கு 64 வயதாகும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த செய்தி உண்மையா இல்லையா என்பது பற்றி நடிகை எதுவும் இதுவரை விளக்கம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.