சங்கீதா கிரிஷ்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. இவர் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் கூட விஜய்யின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சங்கீதா, கிரிஷ் மகள்
இவர் கடந்த 2009ம் ஆண்டு பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஷிவியா எனும் அழகிய மகள் உள்ளார்.
இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பாடகர் கிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..