5 நாட்களில் அதிகம் வசூல் செய்த படம் எது?

பொங்கல் வின்னர்
விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருவது வாரிசு படம் பொங்கல் வின்னரா? துணிவு படம் பொங்கல் வின்னரா? என்று தான்.

முதல் நாளில் இருந்து துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிசு படத்தை விட அதிகமாக குவித்தது.

வசூல்
வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தன்னுடைய முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு என்பது குறிப்பிடத்தக்கது.