நடிகை ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமாகி, தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஷபானா. இவர் சின்னத்திரை நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதினால் இவர்கள் இவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. பின் ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அப்போது கூட ஷபானா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
மூவராக பண்டிகையை கொண்டாடிய ஜோடி
இதனால், மிகவும் எளிமையாகவே கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த தீபாவளி பண்டிகையை கூட நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இருவரும் கொண்டாடினார்கள். அது அவர்களுடைய தல தீபாவளி ஆகும். எம்.எஸ். பாஸ்கர் தங்களுக்கு ஒரு தந்தை போல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து பொங்கல் பண்டிகையையும் ஷபானா மற்றும் ஆர்யன் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தை ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram