வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம். வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும். இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள்.
இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும். கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவளைம் நீங்கும். இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ எண்ணெயை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்த்தியான புருவங்களைப் பெறலாம். கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை மாய்ஸ்சரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது. தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.