வாரிசு
வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு என பல நடிகர்கள் படத்தில் நடித்து இருந்தனர்.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார். இது அவருக்கு இரண்டாவது தமிழ் படம். முதலில் அவர் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து இருந்தார்.
டப்பிங் பேசியது யார்
ராஷ்மிகாவுக்காக சுல்தான் மற்றும் வாரிசு என இரண்டு படங்களுக்கும் டப்பிங் பேசியது ஐஸ்வர்யா பாஸ்கர் தான். அவர் பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்திற்க்கு டப்பிங் பேசியது பற்றி அவர் கொடுத்திருக்கும் பேட்டி இதோ..