அஜித்
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விஸ்வாசம். பாக்ஸ் ஆபிஸில் ரூ. 187 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் துணிவு. இப்படம் முதல் நாளில் இருந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
சாதனையை முறியடித்த துணிவு
இந்நிலையில், புதுக்கோட்டையில் துணிவு படம் புதிய சாதனை படைத்துள்ளது. ஆம், புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையரங்கங்களில் அதிகமாக ரசிகர்கள் வந்த பார்த்த திரைப்படங்களில், பொன்னியின் செல்வன், விக்ரம் அதற்க்கு அடுப்படியாக விஸ்வாசம் இருந்தது.
ஆனால், தற்போது விஸ்வாசத்தின் இடத்தை துணிவு திரைப்படம் பிடித்துள்ளது. ஆம், விஸ்வாசத்தை விட அதிக ரசிகர்கள் துணிவு படத்தை பார்த்துள்ளனர். இதனால் விஸ்வாசத்தின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.