பாக்கியலட்சுமி
கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண் துவண்டு போகாமல் தன்னாலும் குடும்பத்தை கவனிக்க முடியும், சாதிக்க முடியும் என்று செய்து காட்டி வருகிறார் பாக்கியலட்சுமி.
சமையல் தொழிலை செய்து குடும்பத்தை பார்த்துவரும் பாக்கியா இப்போது நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இப்போது எழில் காதல், கல்யாணம் பிரச்சனையை பார்ப்பாரா அல்லது வீடு வாங்கும் பிரச்சனையை கவனிப்பாரா என்பது பாக்கியாவின் கவலையாக உள்ளது.
விலகும் நாயகி
தற்போது இந்த தொடரில் இருந்து ஒரு நாயகி விலகப்போவதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் வெயிட்டான வில்லி வேடம் கிடைத்திருப்பதால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நடிகை ரேஷ்மா விலகப்போவதாக கூறப்படுகிறது.
ராதிகா என்ற வேடத்தில் இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.